2) அரசியலமைப்பின் முகவுரை
⮞ 10 ஆம் வகுப்பு குடிமையியல் அலகு 1.4
அரசியலமைப்பின் முகவுரை:
1."இந்திய மக்களாகிய நாம்" என்ற சொற்களுடன் இந்திய அரசியலமைப்பின் எந்த பகுதி தொடங்குகிறது? முகவுரை
2. முதன் முறையாக முகவுரையுடன் ஆரம்பிக்கப்பட்ட அரசியலமைப்பு எது? அமெரிக்க அரசியலமைப்பு
3. முகவுரையின் மொழி எங்கிருந்து பெறப்பட்டது? ஆஸ்திரேலியா
4. முகவுரையை உருவாக்கியவர் யார்? ஜவஹர்லால் நேரு
5. இந்திய அரசியல் அமைப்பின் படி முகவுரை எத்தனை முறை திருத்தப்பட்டுள்ளது? ஒரு முறை (42வது திருத்தம் 1976)
6. ஜவஹர்லால் நேரு எப்போது தனது குறிக்கோள் தீர்மானத்தை அரசியல் நிர்ணயச் சபையில் கொண்டு வந்தார்? டிசம்பர் 13, 1946
7. அரசியல் நிர்ணய சபையால் நேருவின் குறிக்கோள் தீர்மானத்தை எப்போது ஏற்றுக் கொள்ளப்பட்டது? ஜனவரி 22, 1947
8. "பெருபாரி யூனியன் வழக்கு" நடந்த ஆண்டு? (முகவுரை இந்திய அரசியல் அமைப்பின் ஒரு பகுதி அல்ல) 1960
9. கேசவானந்த பாரதி வழக்கு எப்போது நடைபெற்றது? (முன்னுரை அரசியலமைப்பின் ஒரு பகுதி) 1973
10. எஸ்.ஆர் பொம்மை வழக்கு எந்த ஆண்டு நடைபெற்றது? 1994
11. எல்.ஐ.சி வழக்கு நடந்த ஆண்டு? (அரசியலமைப்பின் ஒருங்கிணைந்த பகுதி) 1995
12. முகவுரை இந்திய அரசியலமைப்பின் திறவுகோல்" என்று அழைத்தவர்? எர்னஸ்ட் பர்க்னர்
13. முகவுரை இந்திய அரசியலமைப்பின் அடையாள அட்டை" என்று அழைத்தவர் யார்? என்.ஏ.பால்கிவாலா
14. முகவுரை இந்திய அரசியலமைப்பின் ஒரு ஊன்றுகோல், ஆன்மா, அணிகலன்" என்று அழைத்தவர் யார்? தாகூர் தாஸ் பார்கவா
15. முகவுரை இறையாண்மை உடைய "மக்களாட்சிக் குடியரசின் ஜாதகம்" எனக் கூறியவர் யார்? கே.கம் முன்ஷி
16. இந்திய அரசியல் அமைப்பு "எங்கள் நீண்ட நாள் கனவு, ஆசை” எனக் கூறியவர்? அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்
17. இந்திய அரசியலமைப்பு அமெரிக்கா முகவுரையை விட மேலானது அரசியலமைப்புச் சட்டத்தின் "உயிர் மூச்சாகும்" எனக் கூறியவர்? நீதிபதி இதயத்துல்லா
18. 42வது சட்ட திருத்தத்தின்படி எத்தனை வாசகங்கள் சேர்க்கப்பட்டன? 3 (சமதர்மம், சமயச் சார்பின்மை, ஒருமைபாடு)
19. பிரெஞ்சு புரட்சி நடந்த ஆண்டு? 1789 (1791ம் ஆண்டு பிரான்சு அரசை மதசார்பற்ற அரசாக மாற்றியது)
20. முகவுரையில் காணப்படும் "சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம்" ஆகிய சொற்றொடர்கள் எங்கிருந்து பெறப்பட்டது? பிரெஞ்சு புரட்சி
21. எந்த ஆண்டு 42வது சட்டத்திருத்தம் திருத்தப்பட்டது? 1976
22. அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக் கொள்ளப்பட்ட நாள்? நவம்பர் 26, 1949
23. இந்தியா சமதர்மம் என்பது எதைச் சார்ந்தது? மார்க்சியம் மற்றும் காந்தியம்
24. முகவரையில் இடம்பெற்றுள்ள சொற்கள் வரிசைப்படுத்துக:
இறையாண்மை, சமதர்ம, மதச்சார்பின்மை, மக்களாட்சி, குடியரசு
25. இந்திய தேசிய காங்கிரஸ் எந்த ஆண்டு மதச்சார்பின்மையை அறிமுகப்படுத்தியது? 1888
26. முதன்முதலில் அரசாங்கத்தின் மூலம் மதச்சார்பின்மை கொள்கையை நடைமுறைப்படுத்தியவர்? மகாராஜா ரஞ்சித் சிங் (பஞ்சாப்)