இந்திய அரசியலமைப்பு உருவாக்கம் / வரைவு குழுக்கள்

 

Question 1

"பாராளுமன்ற முறை நிர்வாகிக்கு கொடுங்கோலாட்சி அளிப்பதற்கு வாய்ப்புகளை வழங்குகிறது" என்று கூறியவர்? (A) H.J. லாஸ்கி

(B) J.S. மில்

(C) ஸ்பென்சர்

(D) ராம்சே மூர்

Ans : A

  • Exam Details: ASSISTANT DIRECTOR - 2019 STD-DEGREE

Question 2

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்டது (A) 26 நவம்பர் 1949

(B) 26 ஜூலை 1949

(C) 26 மே 1949

(D) 26 ஜூன் 1949

Ans : A

  • Exam Details: ARCHAEOLOGICAL OFFICER - 2019 STD: DEGREE

Question 3

அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்? (A) J.B. கிருபாலானி

(B) H.C. முகர்ஜி

(C) A.V. தாக்கர்

(D) சர்தார் வல்லபாய் பட்டேல்

Ans : D

  • Exam Details: GROUP-I - 2019 STD: DEGREE

Question 4

"இந்திய அரசியலமைப்பு, முதல் மற்றும் முதன்மையாக, ஒரு சமூக ஆவணமாகும்" எனக் கூறியவர் யார்? (A) கிரான்வில் ஆஸ்டின்

(B) பைலி

(C) மோதிலால் நேரு

(D) மேற்கூறிய எதுவுமில்லை

Ans : A

  • Exam Details: ARCHAEOLOGICAL OFFICER - 2019 STD: DEGREE

Question 5

இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக பொறுப்பேற்றவர் யார்? (A) சர்தார் பட்டேல்

(B) டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்

(C) டாக்டர் ராதாகிருஷ்ணன்

(D) சி. இராஜ கோபாலாச்சாரியார்

Ans : B

  • Exam Details: SOCIOLOGIST, JUNIOR SCIENTIFIC OFFICER - 2019 STD-DEGREE

Question 6

கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை? (A) K.M. முன்சி

(B) அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்

(C) பட்டாபி சீத்தாராமய்யா

(D) கிருஷ்ணமாசாரி

Ans : C

  • Exam Details: GROUP-I - 2019 STD:DEGREE

Question 7

சட்டங்களின் உயிர் என்ற நூல் வெளியிடப்பட்ட ஆண்டு (A) 1948

(B) 1848

(C) 1748

(D) 1648

Ans : C

  • Exam Details: TECHNICAL ASSISTANT - 2019 STD-DEGREE

Question 8

இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் (A) 15 ஆகஸ்ட் 1947

(B) 30 அக்டோபர் 1948

(C) 15 ஜனவரி 1950

(D) 26 ஜனவரி 1950

Ans : D

  • Exam Details: FISHERIES - 2019 STD-DEGREE

Question 9

கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் ஆட்சி" கிடையாது? (A) இயற்கை நீதி

(B) நியாயமான செயற்பாடு

(C) சமமாக நடத்தப்படும் (ஒவ்வொருவரும்) சூழல்

(D) நீதி சமத்துவம்

Ans : D

  • Exam Details: GROUP-I - 2019 STD:DEGREE

Question 10

இந்திய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்கு எத்தனை ஆண்டுகள் எடுத்துக் கொள்ளப்பட்டன? (A) 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 17 நாட்கள்

(B) 2 ஆண்டுகள், 9 மாதங்கள், 15 நாட்கள்

(C) 2 ஆண்டுகள், 8 மாதங்கள், 10 நாட்கள்

(D) 2 ஆண்டுகள், 7 மாதங்கள், 8 நாட்கள்

Ans : A

  • Exam Details: VETERINARY - 2019 STD:DEGREE

Question 11

அரசியலமைப்பு சட்டத்தை இயற்றுவதற்கு அரசியலமைப்பு நிர்ணய சபை எடுத்துக் கொண்ட கால அளவு (A) 2 வருடங்கள், 11 மாதங்கள், 18 நாட்கள்

(B) 2 வருடங்கள், 8 மாதங்கள், 11 நாட்கள்

(C) 2 வருடங்கள், 11 மாதங்கள், 8 நாட்கள்

(D) 2 வருடங்கள், 11 மாதங்கள், 11 நாட்கள்

Ans : A

  • Exam Details: FISHERIES - 2019 STD-DEGREE

Question 12

I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அச் சட்டமன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும் ; II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது

மேற்கண்ட கூற்றுகளில் எது சரியானது? (A) I மட்டுமே

(B) II மட்டுமே

(C) I மற்றும் II இரண்டும் சரியே

(D) I மற்றும் II இரண்டுமே சரியல்ல

Ans : C

  • Exam Details: GROUP-I - 2019 STD:DEGREE

Question 13

இந்திய அரசியலமைப்பு பற்றி கீழ்கண்டவற்றுள் எது உண்மை. (A) நவம்பர் 26, 1949 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு ஜனவரி 26, 1950 சட்டமாக்கப்பட்டது

(B) ஜனவரி 26, 1949 ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு நவம்பர் 26, 1950ல் சட்டமாக்கப்பட்டது

(C) ஜனவரி 26, 1950ல் ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது

(D) நவம்பர் 26, 1950ல் ஏற்றுக் கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டது

Ans : A

  • Exam Details: ASSISTANT SUPERINTENDENT - ASSISTANT GEOLOGIST - 2019 STD-DEGREE

Question 14

அரசியல் நிர்ணய சபையின் வரைவுக் குழு தலைவர் (A) திரு. C. இராஜகோபாலாச்சாரியார்

(B) Dr. B.R. அம்பேத்கர்

(C) திரு. ஜவஹர்லால் நேரு

(D) Dr. இராஜேந்திர பிரசாத்

Ans : B

  • Exam Details: TECHNICAL ASSISTANT - 2019 STD-DEGREE

Question 15

பொருத்துக : (a) அரசியல் நிர்ணய சபை முதல் கூட்டம் - 1. 4 ஏப்ரல் 1957

(b) வரைவுக் குழு உருவாக்கப்பட்ட தேதி - 2. 13 மே 1952

(c) மாநிலங்கள் அவையின் முதல் கூட்டத்தொடர் - 3. 29 ஆகஸ்ட் 1947

(d) குடியரசு தினம் - 4. 9 டிசம்பர் 1946

(a) (b) (c) (d)

(A) 4 3 2 1

(B) 1 2 3 4

(C) 3 1 4 2

(D) 2 4 1 3

(Note: The text over options A and C reads: "இக்கேள்வி மற்றும் விடை இறுதி முடிவிற்காக வல்லுநர் குழுவின் முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது")

  • Exam Details: GROUP-IV - 2019 STD :SSLC

Question 16

இந்தியாவில் பாராளுமன்ற இடது கொள்கை குறிப்பிடுவது _______________. இது காலனித்துவத்திற்கு பிந்தைய சமூக பொருளாதார மற்றும் அரசியல் வடிவமைப்பின் சித்தாந்தம். 

(A) திருத்தல்வாதம் 

(B) ஜனநாயகம் 

(C) மார்க்சியம் 

(D) சமதர்மம்

 (E) விடை தெரியவில்லை

Ans : A

  • Exam Details: ARCHITECTURAL ASSISTANT - 2021 STD: DEGREE

Question 17

இந்திய அரசமைப்பு நிர்ணய சபை – முதல் கூட்டத்தின் தற்காலிக தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் யார்? 

(A) ஜே.பி. கிருபாளானி 

(B) டாக்டர். சச்சிதானந்த சின்ஹா 

(C) டாக்டர். ராஜேந்திர பிரசாத் 

(D) டாக்டர். பி.ஆர். அம்பேத்கர் 

(E) விடை தெரியவில்லை

Ans : B

  • Exam Details: AGRICULTURAL OFFICER - 2021 STD: HSC

Question 18

இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள இந்தியாவின் பெயர் யாது? 

(A) இந்தியன் மற்றும் இந்துஸ்தான் 

(B) இந்தியா மற்றும் பாரதம் 

(C) பாரதம் 

(D) இந்தியா, பாரதம், இந்துஸ்தான் 

(E) விடை தெரியவில்லை

Ans : B

  • Exam Details: GROUP I - 2020 STD-DEGREE

Question 19

இந்திய அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவர் யார்? 

(A) டாக்டர். B.R. அம்பேத்கர் 

(B) இராஜேந்திர பிரசாத் 

(C) ஜவஹர்லால் நேரு 

(D) மேற்கூறியவற்றுள் எவருமில்லை 

(E) விடை தெரியவில்லை

Ans : A

  • Exam Details: EXECUTIVE OFFICER-2022 STD-DEGREE

20. இந்திய அரசியலமைப்பை உருவாக்க வரைவுக்குழு எடுத்துக்கொண்ட காலம் 

(A) 2 ஆண்டுகள், 11 மாதம், 18 நாள் 

(B) 2 ஆண்டுகள், 9 மாதம், 8 நாள் 

(C) 2 ஆண்டுகள், 7 மாதம், 18 நாள் 

(D) 2 ஆண்டுகள், 5 மாதம், 20 நாள் 

(E) விடை தெரியவில்லை 

Ans : A 

(Side Text: EXECUTIVE OFFICER-2022 STD: DEGREE)

21. "குடியரசு" எனும் பதம் முதன் முதலில் சொல்லப்பட்ட இடம் 

(A) கிரேக்கம் 

(B) ரோம் 

(C) ஜெர்மனி 

(D) பிரான்சு 

(E) விடை தெரியவில்லை 

Ans : B 

(Side Text: ASSISTANT DIRECTOR - 2022 STD: DEGREE)

22. சட்டமியற்றும் அதிகார ஒப்படைப்பும், நிர்வாகத் தீர்ப்பாயங்களும், "புதிய சர்வாதிகாரத்தின்" வெளிப்பாடு எனக் கூறியவர் யார்? (A) ஜான். E. கெர்செல் (B) சர். சிசில் கார் (C) லார்ட் ஹிவார்டு (D) D.L. ஹிவிட் (E) விடை தெரியவில்லை Ans : C (Side Text: GROUP-I – 2022 STD: DEGREE)

23. கூற்று [A] : சட்டத்தின் ஆட்சி என்பது அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள அனைவரும் மற்றும் அரசு மற்றும் பிற நிறுவனங்களும் மக்களால் இயற்றப்பட்ட சட்டத்திற்கு பொறுப்பானவர்கள். காரணம் [R] : சட்டத்தின் ஆட்சி என்பது பன்னாட்டு அமைதி மற்றும் பாதுகாப்பு அடிப்படையில் உருவானது. மேலும் அது மக்களின் உரிமைகளையும் அவர்களின் அடிப்படை சுதந்திரத்தையும் காப்பது முக்கியம் என்கிறது. (A) [A] என்பது சரி ஆனால் [R] என்பது தவறு (B) [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]ன் சரியான விளக்கமாகும் (C) [A] தவறு ஆனால் [R] என்பது சரி (D) [A] மற்றும் [R] என்பது சரி ஆனால் [R] என்பது [A]ன் சரியான விளக்கம் அல்ல (E) விடை தெரியவில்லை Ans : D (Side Text: GROUP-I – 2022 STD: DEGREE)

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.